சீன விஞ்ஞானிகள் ஜுசோஞ்ழி- 3 என்ற ஒரு புதிய சூப்பர் குவாண்டம் கணினியை கண்டுபிடித்துள்ளனர். இது புதிய சகாப்தத்திற்கு அடித்தளம் அமைக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (USTC) ஆராய்ச்சியாளர்கள், குவாண்டம் கணினி தற்போது இருக்கும் கூகுள் நிறுவனத்தின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டரை விட கால் ரில்லியன் (25 ஆயிரம் கோடி) மடங்கு வேகத்தில் இயங்குகிறது என்று தெரிவித்துள்ளனர்.