கீழ்பெண்ணாத்தூர் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு புற்றரசி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஜ்வாலா மாலினிகா க்ஷிப்தா, வஹ்னி ப்ராகார மத்யகா ‘ என்ற வரிகளை திரும்ப திரும்பத் சொல்லுங்கள் என்று வேண்டிக்கொண்டார். கூடியிருந்தவர்கள் இந்த மந்திரத்தை முழங்கினார்கள். சற்று நேரத்தில் மேகங்கள் போன இடமே தெரியவில்லை.
மதுரை மீனாக்ஷி கோவிலில் நவராத்திரியின்போது சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் இப்படி சொன்னார் என்று எங்கோ படித்தேன்.
ஸகஸ்ர நாமத்தில் வருகின்ற பெயர்களுக்கு மந்திர சக்தியும் உண்டு. உதாரணமாக ஸ்ரீ லலிதா ஸகஸ்ர நாமத்தில் வரும் ‘ ஸர்வ வ்யாதி ப்ரசமனி ‘ ‘ ஸர்வ மிருத்யு நிவாரிணீ ‘ என்பது, எல்லா வியாதிகளிலிருந்தும், விபத்துகளிலிருந்தும் நிவாரணம் பெறுவதற்காக உச்சரிக்கப்படுகிறது.
மொத்தத்தில் சொல்லப்போனால் அம்பிகையுடன் நெருங்கிய நேரடித் தொடர்பு கொள்ளப் பயன்படும் மிகச் சிறந்த மந்திர சாதனமாக லலிதா சஹஸ்ரநாமம் விளங்குகின்றது. ஏனெனில் லலிதா சஹஸ்ரநாமத்தில் அம்பிகையின் வடிவம், அவள் தோன்றிய வரலாறு, அவளை வழிபட யந்திரம் மந்திரம், தத்துவம், பரிவார தேவதைகள், வழிபாட்டு முறை, வழிபடுபவருக்கான தகுதி, அவளுடைய அருளால் பெறக்கூடிய மேன்மைகள், தேவியைப் பற்றிய நூதனமான பலவிபரங்களும் அந்தந்த மந்திரங்களால் விளக்கப்பட்டு விடுகின்றன.
அம்பிகை வழிபாட்டில் அன்பு, எளிமை, ஆர்வம், பக்தி, அடக்கம் ஆகியவையே மிகமிக முக்கியம்.
ஆடம்பரமான பகட்டான ஆரவாரமான பூஜைகளைக் கண்டு அம்பிகை ஏமாறமாட்டாள்.
லலிதா சஹஸ்ரநாமத்தில் இரண்டு மந்திரங்கள் உண்டு.
அந்தர் முக சமாராத்யா,
பஹிர்முக சுதுர்லபா
அவளை நம் உள்ளத்துக்குள் தேடி ஆராதிக்க வேண்டும். வெளிப்புறத்தில் அகப்பட அரிதானவள்.
இப்படியே நம்முடைய உயிர் பிரியும் வரை அவள் புகழ் கூறலாம். எனக்கு பேராசை தான் என்கிறீர்களா!! ஆமாம்!! கரும்பு தேன் சுவைக்க அவள் அருள் மட்டுமே என்றென்றும் வேண்டும். இப்பொழுதே சொல்லி பழகி கொண்டால் கண் சொருகி வாய் அடைத்து மூச்சு தொண்டை குழியில் அடைக்கும் தருணம் அவளின் நாம ஜபத்தை, மனமானது ஜபம் செய்யலாம் என்கிற நப்பாசை தான்.
அப்போ கேட்கறேளா!! ஆசை முழுமையாக போகவில்லையா என்று!! இல்லை. அவள் மீது
உள்ள ஆசை மட்டும் போகவில்லை. ஏனென்றால் அவைகளை நாடகம் போல நடத்துபவள் அவளே!! பிறகு எனக்கு என்ன கவலை!! நீயே கதி ஈஸ்வரீ!
அங்காள ஸ்வர்யை நம: ....!