கடவுளுக்கு எந்தெந்த பூக்களால் அர்ச்சனை செய்தால் என்ன மாதிரியான பலன்கள் கிட்டும்! ஆலயத்திலோ அல்லது வீட்டிலோ இருக்கும் தெய்வங்களை பூக்கள் கொண்டு பூஜிப்பதுதான் வழக்கம். ஒவ்வொரு தெய்வத்தையும் வழிபடும் போதும், பூஜை செய்யும் போதும் நாம் அர்ச்சனைக்கு உபயோகிக்கும் மலர்களைக் கொண்டு நமக்கு கிட்டும் பலன்கள் வித்தியாசப்படும். ஆம் தெய்வத்திற்கு எந்தெந்த பூக்களால் அர்ச்சனை செய்தால் என்ன மாதிரியான பலன்கள் நமக்கு கிட்டும் என்பது இங்கு காண்போம்.
அல்லிப்பூ ⇔ செல்வம் பெருகும்.
பூவரசம்பூ ⇔ உடல் நலம் பெருகும்.
வாடமல்லி ⇔ மரணபயம் நீங்கும்.
மல்லிகை ⇔ குடும்ப அமைதி.
செம்பருத்தி ⇔ ஆன்ம பலம், நோயற்ற வாழ்வு.
காசாம்பூ ⇔ நன்மைகள்.
அரளிப்பூ ⇔ கடன்கள் நீங்கும்.
அலரிப்பூ ⇔ இன்பமான வாழ்க்கை.
ஆவாரம்_பூ ⇔ நினைவாற்றல் பெருகும்.
ரோஜாபூ ⇔ நினைத்தது நடக்கும்.
மரிக்கொழுந்து ⇔ குலதெய்வம் அருள்.
சம்பங்கி ⇔ இடமாற்றம் கிடைக்கும்.
சங்குப்பூ (வெள்ளை) ⇔ சிவப்பூஜைக்கு சிறந்தது.
சங்குப்பூ (நீலம்) ⇔ விஷ்ணு பூஜைக்கு சிறந்தது.
மனோரஞ்சிதம் ⇔ குடும்ப ஒற்றுமை
தாமரைப்பூ ⇔ செல்வம் பெருகும், அறிவு வளர்ச்சி பெறும்.
நாகலிங்கப்பூ ⇔ லட்சுமி கடாட்சம், ஆரோக்யம்.
முல்லைப்பூ ⇔ தொழில் வளர்ச்சி, புதிய தொழில்கள் உண்டாகும்.
நித்திய கல்யாணிபூ ⇔ முன்னேற்றம் பெருகும்.
தங்க அரளி (மஞ்சள் பூ)
குருவின் அருள், பெண்களுக்கு மாங்கல்ய பலம் கடன்கள் நீங்கும், கிரக பீடை நீங்கும்.