tamilnadu epaper

அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்

அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்

சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்

 

புல்லும் பரிமளப் பூங்கொடியே நின்புது மலர்த்தாள்

 

அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்

 

செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே.

 

 

சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன் = சொல்லும் பொருளும் எப்படி ஒன்று இணைந்து இருக்கிறதோ அதுபோல உனது கணவருடன்

 

 

புல்லும் = இணைந்து இருக்கக்கூடிய

 

பரிமளப் பூங்கொடியே = வாசனை வீசும் பூங்கொடியைப் போன்றவளே

 

 நின்புது மலர்த்தாள் = அன்று பூத்த மலரை போல் இருக்கக்கூடிய உனது தாமரை திருவடிகளை

 

அல்லும் பகலும் = இரவும் பகலும்

 

 தொழுமவர்க்கே = தொழக்கூடிய அடியவர்களுக்கு

 

 அழியா அரசும் = நிலையான அரசாட்சியும்

 

 

செல்லும் தவநெறியும் = மோட்சத்தை நோக்கி செல்லும் தவநெறியையும்

 

 சிவலோகமும் சித்திக்குமே = சிவனை அடையும் வழியும் தானே கிடைக்குமே.

 

ஒரு சொல்லிலிருந்து பொருள் தோன்றுகிறது. சொல்லும், பொருளும் இணை பிரியாது. அதுபோல உனது துணைவருடன் இணை பிரியாமல் இருந்து மணம் வீசக்கூடிய வாசனை மலர் போன்ற அன்னையே. பிரம்மன் முதல் தேவாதி தேவர்கள் உன் திருவடியில் மலர்களால் அர்ச்சிப்பதால் புது மலரைப் போன்ற இருக்கக்கூடிய உனக்கு திருவடிகளை, இரவும் பகலும் தொழக்கூடிய அடியவர்களுக்கு அடியாத அரசும் முக்தி தரக்கூடிய தவ நெறியும், சிவலோகமும் எளிதில் கை கூடுமே

 

(ஸாம்ராஜ்யதாயினி. = சாம்ராஜ்ஜியத்தை அளிக்கக் கூடியவள்)

 

(தொடரும் / வளரும்)

 

 சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை