tamilnadu epaper

ஆடி மாதம் அம்மன் மாதம்*

ஆடி மாதம் அம்மன் மாதம்*

மயிலாப்பூர் அம்மன்கள்*

 

மயிலையின் காவல் தெய்வங்களாகத் திகழ்பவர்கள், முண்டகக்கண்ணி அம்மன் 

மற்றும் கோலவிழி அம்மன்

 

*முண்டகக்கண்ணியம்மன்* 

 

அன்னையின் கருவறை ஓர் எளிய தென்னங்கீற்றுக்கொட்டகை. இங்கு, கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் அம்மனை, 'விரிந்த பெரிய விழிகளைக் கொண்டவள்' என்ற பொருளில் 'முண்டகக் கண்ணியம்மன்' என்கின்றனர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, தற்போது கோயில் இருக்கும் பகுதி, குளமாக இருந்ததாம். அப்போது, அந்தக் குளக்கரையில் பழமையான ஆலமரம் ஒன்றும் இருந்தது. அந்த ஆலமரத்தடியில்தான் அன்னை சுயம்புவாக வெளிப்பட்டாள் என்கின்றனர். இங்கு, மூலவராக வீற்றிருக்கும் அம்மனுக்கு உருவம் இல்லை. தாமரை மொட்டு போன்று காட்சியளிக்கும் சுயம்பின் உச்சிப் பகுதியில், சந்தனத்தைக் குழைத்து உருவம் செய்து வழிபடுகிறார்கள். சந்தன உருவத்தில் குங்குமம் வைத்து, தலைக்குப் பின்புறத்தில் நாக கிரீடம் சூட்டிப் பார்க்கும்போது அம்மன் அமர்ந்த நிலையில் காட்சியளிப்பதைப் போன்றே இருக்கும். மூலவர் சந்நிதிக்கு இடப்புறத்தில் உற்சவர் சந்நிதி இருக்கிறது.

 

ரேணுகாதேவியின் அவதாரங்களுள் ஒன்றாகவும், சப்த கன்னிகைகளில் ஒருவராகவும் இவர் கருதப்படுகிறார்.

 

லஸ்சில் இருந்து சாந்தோம் செல்லும் சாலையில் இடதுபுறத்தில் பெரிய வளைவு காணப்படும். அந்த வழியில் சென்று கோயிலை அடையலாம்.

 

*கோலவிழி அம்மன்* 

 

கருவறையில் முன்பாக உள்ள சிறிய விக்ரகம் ஆதிசங்கரரால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும், அதற்குப் பின்புறம் உள்ள பெரிய விக்ரகம் சித்தர்களால் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரதிஷ்டை செய்து வழிபடப்பட்டது என்றும் தலவரலாறு கூறுகின்றது.

 

அமர்ந்த கோலத்தில் அற்புதமான எழிலுடன் கொலு வீற்றிருக்கும் இந்த அன்னையை வழிபட்டால் ராகு கேது தோஷம் நீங்கும்.

 

கோலவிழி அம்மன் கோயில் மயிலாப்பூர் பஜார் வீதியில் இருந்து கடற்கரைக்குச் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது.

 

கீதா ராஜா சென்னை