tamilnadu epaper

ஆடி மாதம் அம்மன் மாதம்*

ஆடி மாதம் அம்மன் மாதம்*

திருவக்கரை வக்ரகாளியம்மன்*,திண்டிவனம்

 

மஹீம் மூலாதாரே கமபி மணிபூரே ஹுதவஹம்

 

ஸ்த்திதம் ஸ்வாதிஷ்டானே ஹ்ருதி மருத - மாகாஸ முபரி 

 

-செளந்தர்ய லஹரி 

 

பிரம்மம் அசைவில்லாமல் இருக்கிறது. அந்த பிரம்மத்தின் காரியங்களைச் செய்யும் சக்தியே பராசக்தி. தட்சிணாமூர்த்தியாக யோக நிஷ்டையில் ஈசன் அமர்ந்திருக்கும்போது அவர் உள்ளிருக்கும் அம்பிகை வெளிப்பட்டு துஷ்டர்களை அழித்து தர்மத்தை நிலை நாட்டுகிறாள். அம்பிகையே பரமாத்மா. அனைவருக்குள்ளும் இருந்து சக்தியைத் தருபவள். அவளின் அபாரமான சக்தியை வெளிப்படுத்துவது காளி ரூபம். அவதாரங்கள் எல்லாம் மனிதர்களை நல்வழிப்படுத்தவே உண்டாகின்றன. தன்னை நம்பி வருபவர்களைக் காக்கவே அவள் காளி அவதாரமும் எடுக்கிறாள்.

 

திருவக்கரையில் அம்பிகை அமிர்தேஸ்வரி, வடிவாம்பிகை என்ற திருப்பெயர்களுடன் காட்சி அளித்தாலும் அவளின் வக்கிர காளி ஸ்வரூபமே மிகப் பிரசித்தம். குண்டலினி முனிவர் வம்சத்தில் வந்த 

வக்கிராசுரன் என்ற அசுரனை அழிக்க ஈசனிடம் வரம் பெற்று, அன்னை காளியாக அவதாரமெடுத்து அவனுடன் போர் புரிந்து வெற்றி பெற்றாள். 

 

அசுரர்களை சம்ஹாரம் செய்ததால் அன்னை இங்கு ஓங்காரமாக இருந்திருக்கிறாள். ஆதிசங்கரர் இங்கு வந்து அன்னையை சாந்தப்படுத்தி, இடது பாதத்தில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்திருக்கிறார். "வக்ர சாந்தி திருத்தலம்' என்றே பெயர் வழங்குகிறது. 

 

ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் குறைந்தது ஒரு லட்சம் பக்தர்களாவது இங்கு கூடுகின்றனர்.

 

கீதா ராஜா சென்னை