ப்ரகோஷ்டே முஷ்டௌ ச ஸ்தகயதி நிகூடாந்தர - முமே:'
-செளந்தர்ய லஹரி
பிறந்த குழந்தைகள் புத்திசாலியாகவும், விவேகம், பக்குவம்" />
திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை*
"தநுர் - மந்யே ஸவ்யேதர கர - க்ருஹீதம் ரதிபதே
ப்ரகோஷ்டே முஷ்டௌ ச ஸ்தகயதி நிகூடாந்தர - முமே:'
-செளந்தர்ய லஹரி
பிறந்த குழந்தைகள் புத்திசாலியாகவும், விவேகம், பக்குவம் உடையவர்களாகவும் விளங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் பெற்றவர்கள். மனப்பூர்வமான பக்தியுடன் தன்னை வணங்கும் பக்தர்களின் வாழ்வில் ஒளியேற்ற, கரு காத்த நாயகியாக திருக்கருகாவூரில் ஆட்சி புரிகிறாள் அம்பிகை.
சதுர்புஜ நாயகியாக, நின்ற கோலத்தில், இடது கையை இடுப்பில் வைத்த நிலையில் காட்சி தருகிறாள். இங்கு வந்து அம்பிகையின் பாதத்தில் நெய் வைத்து வணங்கி, பின்னர், படி மெழுகிய நெய்யை, நாற்பத்தி எட்டு நாட்கள் சாப்பிட்டு வந்தால் குழந்தைப்பேறு உண்டாகும் என்பது ஐதீகம்.
சௌந்தர்ய லஹரியில் ஆதிசங்கரர், அம்பிகையின் புருவம் வளைந்த வில் போன்று காணப்படுவதற்கு ஓர் அழகான உவமானத்தைக் கூறுகிறார்.
"ஜகன்மாதாவான தேவி, தன்னால் படைக்கப்பட்ட இவ்வுலக உயிர்களுக்கு எல்லாம் எந்தத் துன்பமும் நேராமல் இருக்கவே முயற்சிக்கிறாள். அப்படி ஏதானும் நேர்ந்தால், அதை எப்படி நீக்குவது என்ற யோசனையில் ஆழ்ந்து இருக்கும்போது அவளின் புருவங்கள் வளைந்து காணப்படுகின்றன!' என்கிறார்.
கீதா ராஜா சென்னை