வந்தவாசி, ஆக 04:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மாயி திருக்கோயிலில் நேற்று ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மூல மூர்த்திகளுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. மேலும் பட்டாடை உடுத்தி, வீர வாளுடன் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தனர். இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
மேலும் வந்தவாசி ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் கோவில், ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.