பொதுவாக கோயில்களில் சாமிக்கு அர்ச்சனை செய்வோம். அர்ச்சனை தட்டில் தாம்பூலம் பழம் மற்றும் தேங்காய் இருக்கும். அர்ச்சனை செய்யும்போது தேங்காயை உடைத்து படைப்பது கோயில்களில் பரவலான பழக்கம். ஆனால் ஒரு கோவிலில் ஆண்டில் ஒரு நாள் மட்டும் தேங்காயை உடைக்காமல் படைத்திடும் பழக்கம் இருக்கிறது.
அந்தக் கோயில் தஞ்சாவூர் மேல ராஜ வீதியில் இருக்கும் ஸ்ரீ பங்காரு காமாட்சி கோயில். இந்த கோயிலில் காணும் பொங்கல் நாளில் மட்டும் இப்படி செய்கிறார்கள். பொங்கலி ன் போது சிறப்பு அலங்காரத்தில் அம்மாள் முகப்பு மண்டபத்திற்கு எழுந்தருள்வார். அப்பொழுது முழு தேங்காயை அப்படியே நிவேதனம் செய்வார்கள். இந்தக் காட்சியைக் காண கண் கோடி வேண்டும்.
-ந. சண்முகம்
திருவண்ணாமலை