டிரம்ப் நிர்வாகம், ஆப்பிரிக்காவுக்கு அளிக்கப்படும் அமெரிக்க உதவியை 90 நாட்களுக்கு நிறுத்தி யுள்ளது. சஹாரா பாலைவனத்தை சுற்றியுள்ள பகுதி களுக்கு 1,200 கோடி டாலர் உதவி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிதி பெரும்பாலும் சுகாதாரம், கல்வி மற்றும் மனிதா பிமான உதவிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆப்பிரிக்காவின் செல்வத்தை அமெரிக்கா சுரண்டி வருவதாகவும், காங்கோ போன்ற நாடுகளில் ஆட்சி கவிழ்ப்பு சதிகளுக்கு அமெரிக்கா பின்புலமாக இருப்ப தாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. காங்கோவில் உள்ள கோபால்ட் மற்றும் தங்கம் போன்ற இயற்கை வளங்களை சுரண்டுவதற்காக, எம் 23 கலகக் கும்பல் தாக்குதல் களை நடத்தி வருகிறது. இது பன்னாட்டு கார்ப்பரேட்டு களின் நலன்களுக்கு உதவுவதாக கருதப்படுகிறது.