ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் தொடர் பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 29-ம் நிலை வீரரான இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய், 17-ம் நிலை வீரரான பிரான்ஸின் தோமா ஜூனியர் போப்போவுடன் மோதினார். 53 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரனாய் 19-21,16-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.