வாஷிங்டன்:
டொமினிகன் குடியரசுக்கு சுற்றுலா சென்றபோது காணாமல் போன இந்திய வம்சாவளி மாணவி சுதிக்ஷா கோனாங்கியை தேடி வருகின்றனர்.
இந்திய வம்சாவளி மாணவி சுதிக்ஷா கோனாங்கி (வயது 20) அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலையில் படித்து வந்தார். இவர், நண்பர்களுடன் டொமினிகன் குடியரசில் சுற்றுலா சென்றார். புன்டா கானாவில் உள்ள ரியு ரெப்யூப்ளிகா ஹோட்டலில் கடற்கரைக்கு சென்றுள்ளார். பிகினி உடையில் கடற்கரையில் நடந்து சென்றபோது மர்மமான முறையில் காணாமல் போனார்.
இதையடுத்து, டொமினிகன் குடியரசின் அதிகாரிகள் சுதிக்ஷா கோனாங்கியை தேடி வருகின்றனர். தேடுதல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கோனாங்கி உடன் சென்ற மாணவிகளிடம் போலீசார் விசாரித்தனர். அவர்கள் அளித்த தகவல்படி கடல் பகுதியில் தேடும் பணி நடந்து வருகிறது.