புதுக்கோட்டை, மே 25–
தேர்தலுக்கு இன்னும் 9 மாதம் தான் இருக்கிறது. அதற்குள் அரசு திட்டங்கள் மக்களுக்கு சென்றடையும் வகையில் அதிகாரிகள் பணி செய்து அரசுக்கு நற்பெயர் ஏற்படுத்துங்கள் என்று துணை முதல்வர் உதயநிதி கூறினார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது:
“ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் இந்த நான்காண்டுகாள ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலத்தின் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய திட்டங்களை செய்யும்போது மக்களுக்கு கிடைப்பது இடையூறும் தடங்கல் ஏற்படுகிறது. அதனை களையும் வகையில் மக்களிடம் மனுக்களை பெற்று அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலுக்கு இன்னும் 8,9 மாதங்கள் தான் இருக்கக்கூடிய நிலையில் எஞ்சிய பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். பட்டா கேட்டு வருபவர்களை அலைக்கழிக்காமல் உடனுக்குடன் தீர்வு காண வேண்டும். பட்டா வழங்கும் போது மக்கள் பிரதிநிதிகளை அழைத்துச் சென்று பட்டா வழங்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் கொடுக்கும் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு திட்டங்கள் மக்களுக்கு சென்றடையும் வகையில் அதிகாரிகள் பணிகளை செய்து அரசுக்கு நற்பெயர் ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு உதயநிதி பேசினார்.
++