இன்று சித்திரை மாதம் திருவோணம் நட்சத்திரம்.திருநெல்வேலி மாவட்டம் களக்காடு கருவேலங்குளம் திருத்தலம் அருள்மிகு ஸ்ரீ கோமதி அம்பாள் சமேத சௌந்தர்ய பாண்டீஸ்வரர் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஶ்ரீ நடராஜர் பெருமான்
*900 ஆண்டுகள் பழைமையான இவ்வாலயம் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது
*இங்குள்ள நடராஜர் விக்ரஹம் ஆதியில் வந்த ஐந்து நடராஜர் விக்ரஹங்களில் ஒன்றாக கருதப்படுகிறது
*தில்லை சிதம்பரம் நடராஜர் சபை சிலை வடித்த அதே ஸ்தபதி இந்த நடராஜர் சிலையை வடித்து தந்ததாக கூறப்படுகிறது
*நடராஜர் பெருமான் இங்கு ஆனந்த தாண்டவ கோலத்தில் காட்சி தருகிறார்
*ஆருத்ரா தரிசனம் இங்கு பத்து நாட்கள் உற்சவமாக நடத்தப்படுகிறது
*கேரளத்தில் இருந்தும் இக்கோயிலுக்கு திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர்