கள்ளிப் பழ ஜூஸ்..!
தேவையான பொருட்கள் :
கள்ளிப்பழம் 6 (இரு நபர்களுக்கு)
சர்க்கரை (அ) நாட்டுச் சர்க்கரை (தேவையான அளவு)
செய்முறை :
பழங்களை பறித்து கூர்மையான பிளேடால் கொத்தாக இருக்கும் முள்ளை கவனமாக வெட்டி எடுக்க வேண்டும். பின்னர் பழத்தின் மேல் பாகத்தை வெட்டி உள்ளிருக்கும் நட்சத்திர முள்ளை எடுக்க வேண்டும்.
அதன் பின்னர் 3 பழங்களுக்கு ஒரு சிறிய தம்ளர் என்ற அளவில் தண்ணீர் எடுத்து அதனுள் பழத்தைப் போட்டு நன்கு பிழிந்து சதைப் பகுதி தண்ணீரோடு கலக்கும்படி பிசைய வேண்டும். நன்கு தண்ணீரோடு பழம் கலந்த பின்னர் வடிகட்டியால் வடிகட்டி குடிக்கக் கொடுக்கலாம். கண்ணாடி டம்ளரில் கொடுத்தால் அதன் நிறம் கண்ணைக் கவரும்.
ஜுஸின் இளஞ்சிவப்பு வண்ணம் குடிக்க வேண்டும் என்ற ஆசையத் தூண்டும். குடித்தால் அதன் சுவை வித்தியாசமாக இருக்கும். இனிப்பு சேர்த்தும் இனிப்பு சேர்க்காமலும் குடிக்கலாம். கள்ளிப் பழத்திற்கு உடல் சூட்டைத் தணிக்கும் குணம் உள்ளதால் இது உடல் நலத்திற்கு நல்லது.
-ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.