tamilnadu epaper

உலகிலேயே குறைந்த விலைக்கு காஸ் தருவது பா.ஜ. அரசு தான்..! மத்தியஅமைச்சர் விளக்கம்

உலகிலேயே குறைந்த விலைக்கு  காஸ் தருவது பா.ஜ. அரசு தான்..!  மத்தியஅமைச்சர் விளக்கம்


புதுடெல்லி, ஏப். 9–

உலகிலேயே இந்தியாவில்தான் குறைந்த விலைக்கு சமையல் காஸ் தருகிறோம் என மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி விளக்கம் அளித்தார்.

 மத்திய அரசு திடீரென காஸ் சிலிண்டருக்கு ரூ.௫௦ உயர்த்தியது. இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்துள்ளன. மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியும் உயர்த்தப்பட்டது.

ஏன் விலை உயர்வு...

 இந்த விலை உயர்வு பற்றி மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிபொருள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விளக்கம் அளித்துள்ளார். 

  உலகிலேயே மிகவும் குறைவான விலையில் சமையல் எரிவாயுவை வழங்கி வருவது மத்திய பா.ஜ. அரசு தான். அரசின் உஜ்வாலா திட்டத்தை எளிதாக்கும் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டு வரும் நிலையில், அதன் காரணமாக சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது.

 மோடி அரசு பதவி ஏற்கும் முன்பு இந்தியாவில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் இணைப்புகள் 14 கோடியாக இருந்தன. தற்போது அவை 33 கோடியாக உயர்ந்துள்ளது. சவுதி அரேபியா உடனான எரிவாயு ஒப்பந்த விலை உயர்ந்த போதிலும், எல்பிஜி சிலிண்டர் விலை இந்தியாவில் குறைவாக இருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்பட்ட போதிலும், சில்லறை விற்பனையில் எரிபொருள் விலை உயராதும். 

வித்தியாசம்

 பா.ஜ., ஆளும் மாநிலங்களுக்கும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கும் பெட்ரோல், டீசல் விலையில் வித்தியாசங்கள் உள்ளன. இங்கு 10 முதல் 12 ரூபாய் விலை வித்தியாசம் காணப்படுகிறது. 2007 ம் ஆண்டு இந்தியாவுக்கு மொத்தம் 27 நாடுகள் கச்சா எண்ணெய்விநியோகம் செய்தன. தற்போது 40 நாடுகள் வினியோகிக்கின்றன. 

இவ்வாறு அவர் கூறினார்.