காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த பிறகும் இஸ்ரேல் ராணுவத்தால் 137 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் பலமுறை தாக்குதல்கள் நடத்தியுள்ளது. இந்நிலையில் ஹமாஸ் அமைப்பின் செய்தி அலுவலக தலைவர் சலாமா மரூஃப் இந்த தகவலை தெரிவித்தார்.இதில் ரஃபா நகரில் மட்டும் சுமார் 52 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.