மொட மொட வென
ஹாக்கி நிற சீறுடை
பளபளவென மின்னும்
கரும் பழுப்பு காலணி.
இருபுறமும் கூர்வேலென
முறுக்கி விட்ட
கருகரு மீசை!
பீடான காவலர் தோற்றம்!
மிடுக்கான சல்யுட்!
'நான் 2889
முத்து கறுப்பன்
ஏ, ஆர் போலிஸ்
ரிபோர்டிங் ஃபார் ட்யுடி'
என்ற பையனை
மேலும் கீழுமாகப் பார்த்து
அவனது பாஸ்போர்ட்டை வாங்கி கையெழுத்திட்டேன்.
பெண் அதிகாரிக்கு
ஜீப் ஓட்ட எவரும் வராத நிலையில்
பெரிய மனசு பண்ணி
வந்தான்;
கண்ணன் என் சேவகன் போல்
அந்த நாளிலிருந்து எந்நாளும் என் ஓட்டுநர் என் மகன் போல் எனக்கு அரணாய் இருந்தான்
எந்நேரமும் எங்கும்
அச்சமின்றி செல்லவும்;
காவல் நிலையங்களில்
இருப்பவர்களை எனக்கு இனம் காட்டியும்;
குற்ற நிகழ்விடங்களில்
எனக்கு பாதுகாப்பாகவும்!
இன்றும் எனது தொடர்பு வட்டத்தில்
மேடம் ட்ரைவர் என்றே
தன்னை அடையாளம் படுத்திக் கொண்டு.
( அவன் டயுடிக்கு வந்த அன்று...
வழக்கம் இல்லாத வழக்கமாய்; நான்
எழுந்து பதிலுக்கு சல்யுட் செய்ததை;
இப்போது நினைத்தாலும் சிரிப்பு
வருகிறது. ஒருவேளை, அது தான்
எங்கள் நட்புக்கு அடிக்கல்லோ?
-சசிகலா விஸ்வநாதன்