tamilnadu epaper

கருணாநிதி பிறந்த நாள் விழாவில் நலத்திட்ட உதவிகள்

கருணாநிதி பிறந்த நாள் விழாவில் நலத்திட்ட உதவிகள்


சிவகாசி, ஜூன் 4

சிவகாசி அருகே திருத்தங்கல் தனியார் மண்டபத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் விழா நேற்று நடந்தது.


பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், சலவைத் தொழிலாளர்களுக்கு இஸ்திரிப் பெட்டி, தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடை, அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.