tamilnadu epaper

கற்ப மூலிகை  கருந் துளசி பயன்கள்...

கற்ப மூலிகை   கருந் துளசி பயன்கள்...

 

 

சாதாரண துளசி செடி போலவே கருந் துளசி இருக்கும். ஆனால் இலைகள், தண்டு மற்றும் பூ, காய் கருமையாக இருக்கும்

இதை கிருஷ்ண துளசி என்றும் கூறுவர்.

இந்தக் கருந் துளசியினால் ஏற்படும் பயன்களை பார்ப்போம்.

 

மிளகுடன் 10 துளசி இலைகளை பறித்து மென்று விழுங்கினால் தொண்டையில் உள்ள சளி முற்றிலுமாக நீங்கும் 

 

 

காலையில் எழுந்தவுடன் பல்லைக் கொப்பளித்துவிட்டு 5 இலைகளை உட்கொண்டால் மலச்சிக்கல் மற்றும் வயிற்று உபாதைகள் நீங்கும்

 

வாய் துர்நாற்றத்தைப் போக்க கருந் துளசி இலைகளை பறித்து வாயில் மென்றால் பற்களில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும். வாயும் துளசி மணம் கமழும்.

 

 

இரவில் செம்பு உலோகப்பாத்திரத்தில் 10 துளசி இலைகளை நசுக்கிப் போட்டு அதில் அரை டம்ளர் தண்ணீர் கலந்து விடவும். பின் காலையில் வெறும் வயிற்றில் பல்லைக் கொப்பளித்துவிட்டு அந்த தண்ணீரினைப் பருக வேண்டும். உடலில் உள்ள அனைத்து தாதுப்பிரச்னைகளும் தீர்ந்துவிடும். தேகம் மிளிரும். கண்புரை ஏற்பட்டாலும் சரிசெய்துவிடும்

 

தினமும் கருந்துளசியை தவறாமல் எடுத்து வந்தால் 48 நாட்களில் சளி மற்றும் கபநோய்களிடம் இருந்து உடலை பாது காத்துக்கொள்ளலாம்.

 

கருந்துளசியை சளித்தொல்லைக்கு ஒரு சிறந்த மருந்துச் செடியாக குறிப்பிடலாம். ‘ஆசிமம் டெனியபுளோரம் டைப்பிகா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்த செடிகளின் இலைகள் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகின்றன.

 

சிறிது கருந்துளசி இலைகளை எடுத்து பசும்பாலில் போட்டு காய்ச்சி குடிக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

 

கருந்துளசியை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால், சைனஸ் தொல்லைகளால் ஏற்பட்ட சளி நீங்கும்.

 

அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க 5 அல்லது 10 கருந்துளசி இலைகளை ஒரு லிட்டர் நீரில் ஊற வைத்து, அந்த நீரை அருந்தி பின்னர் இலைகளை மென்று சாப்பிட வேண்டும்.

 

தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் 5, 4 இலைகளை சாப்பிட்டு வந்தால் கிருமித் தொற்றினால் ஏற்படும் சளித்தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்....

 

ராஜகோபாலன்.J

சென்னை 18