காங்கோ மருத்துவமனையில் இருந்து செவிலியர்கள் நோயாளிகள் என 116 பேர்களை எம்23 ஆயுதக்குழு கடத்தியுள்ளது. மேலும் கடத்தலை நியாயப்படுத்தும் வகையில் கடத்தப்பட்டவர்கள் காங்கோ ராணுவ வீரர்கள் எனவும் அரசுக்கு ஆதரவான போராளிகள் எனவும் தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் கடத்தலை ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் கண்டித் துள்ளது. எம்23 ஆயுதக்குழு காங்கோவின் பலப் பகுதிகளை கைப்பற்றி முன்னேறி வருவது குறிப்பிடத்தக்கது.