9ஆவது சீசன் மினி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் விடுமுறை நாளான ஞாயிறன்று துபாயில் நடைபெற்றது. இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கியது. 7 ஓவரை வீசும் போது இந்திய வீரர் ஷமிக்கு நியூஸிலாந்து வீரர் ரச்சின் அடித்த பந்து மூலம் (6.3 ஓவரில்) இடது கையில் காயம் ஏற்பட்டது. சிறிது நேர சிகிச்சைக்குப் பின்னர் ஷமி மீண்டும் பந்துவீசினார்.