tamilnadu epaper

குடியிருப்புக்குள் ராணுவ விமானம் விழுந்து 46 பேர் பலி

குடியிருப்புக்குள் ராணுவ விமானம்  விழுந்து 46 பேர் பலி

சூடான் நாட்டின் ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று செவ்வாய்க்கிழமை இரவு குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் சுமார் 46 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த விமானத்தில் உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை அந்நாட்டு ராணுவம் உறுதிப்படுத்தவுமில்லை, மறுக்கவுமில்லை. இதில் 10 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.