தஞ்சாவூர், மே 4
தமிழ்நாட்டில்கோடையில் மின்வெட்டு வராது என மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன்கூறினார்.
தஞ்சாவூர் மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்கம் சார்பில் நேற்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை ஒரு நாள் பல்லுயிர் பாதுகாப்பு கருத்தரங்கம் ‘குரல் இல்லாதோர்க்கு குரல் கொடுப்போம்‘ என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது.
இதில் தமிழ்நாடு மின் வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
இந்த கருத்தரங்கில் விலங்கு நல ஆர்வலர்கள் டாக்டர். அப்பு பிள்ளை முருகன், சாலி வர்மா, பிராப்தி பஜாஜ், டாக்டர் நம்பி, டாக்டர். மினி வாசுதேவன், டாக்டர் சேகர், மற்றும் டாக்டர் ஜெயகிருஷ்ணன் ஆகியோர் தங்களது கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த தன்னார்வ அமைப்பினர் தாங்கள் மேற்கொண்டு வரும் விலங்கு நல பணிகள் குறித்தும் தங்கள் பங்களிப்பையும் விளக்கினர்.
தமிழ்நாடு வனத்துறை மற்றும் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் விலங்குகளை கையாளும் முறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.
மின்வெட்டு வராது
முன்னதாக தமிழ்நாடு மின் வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘’மாநிலம் முழுவதிலும் தற்போது மின்வெட்டு இல்லை. இன்னும் 10 நாட்களில் காற்றாலை மின் உற்பத்தி துவங்கி விடும். அப்போது தனியாரிடம் வாங்கும் மின்சாரம் தேவைப்படாது என்றார்.