tamilnadu epaper

சிறுகீரையின் மருத்துவப் பயன்கள்

சிறுகீரையின் மருத்துவப் பயன்கள்

 

 

இந்தக் கீரையை தினமும் சமைத்துச் சாப்பிட இரும்புச் சத்து உடலில் பரவும்.

 

 

இந்த கீரையை சாப்பிட்டால் காச நோய் குணமாகும். நீர்க்கடுப்பு, வீக்கம், பித்தநோய் சரியாகும்.

 

 

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இக்கீரையை தினமும் சாப்பிட்டால் இன்சுலின் இயல்பாக சுரக்கும்.

 

 

இதில் கால்சியம் அடங்கியிருப்பதால் எலும்பைப் பலப்படுத்துகிற ஆற்றல் இதற்கு உண்டு. 

 

 

இந்தக்கீரை நினைவாற்றலுக்கு மிகவும் உதவும். நல்ல உடற்கட்டுடன் திகழ, சிறுகீரையோடு துவரம்பருப்பு, சிறிய வெங்காயம் போட்டு நெய்யை வேண்டிய அளவு சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும்.

 

 

நீர் எரிச்சல் தணியும். காசநோயைக் கட்டுப்படுத்தும். மூலநோயைக் கட்டுப்படுத்தும். வாயுவை அகற்றும். வாதநோயை அகற்றும். மாலைக்கண், வெள்ளெழுத்து போன்ற நோய்களை நீக்கும். 

 

 

 

 

 

 

 

 

 

 

தண்டுக்கீரையின் மருத்துவப் பயன்கள்

 

குடல் புண், அல்சர் போன்ற நோய்களுக்கு இந்த கீரை சேர்த்துக் கொண்டால் நல்லது.

 

 

கருப்பை தொடர்பான பிரச்சைகள் குறையும்.

 

 

இது உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது.

 

 

தண்டுக்கீரையில் இரும்புச் சத்தும், கால்சியம் சத்தும் அதிகம் உள்ளது. இது உடலுக்கு குளிர்ச்சி அளிப்பது. இதனால் மூல நோய் உள்ளவர்கள் இதனை உணவுடன் எடுத்துக் கொள்ளலாம்.

 

 

 

 

 

 

 

 

 

 

தூதுவளை கீரையின் மருத்துவப் பயன்கள்

 

இந்த இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ அல்லது குழம்பாகக் கடைந்து சாப்பிட்டால், நெஞ்சில் கட்டிருக்கும் கபம் நீக்கி உடல் பலமடையும்.

 

 

இதன் இலைச் சாற்றை சம அளவு நெய்யில் காய்ச்சிக் காலை, மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா மூச்சுத் திணறல் உள்ளிட்ட நோய்கள் குணமடையும்.

 

 

இந்த இலையில் ரசம் செய்து சாப்பிட்டால் உடல்வலி, நுரையீரல் கோளாறுகள் குணமடையும்.

 

 

தூதுவளை கீரையை சமைத்து சாப்பிட்டால், பற்கள் வலுவடைவதுடன் பித்த நோயும் குணமாகும்.

 

 

தூதுவளை இலையை அரைத்து தண்ணீருடன் சேர்த்து அருந்தி வந்தால் இருமல், இரைப்பு நோய் நெருங்காமல் இருக்கும்.

 

 

தொண்டை வலியால் அவதிப்படுப்பவர்கள், இதன் இலையை கஷாயம் செய்து குடிப்பது நல்லது.

 

 

 

 

 

 

 

 

 

 

பசலைக்கீரையின் மருத்துவப் பயன்கள்

 

உண்மையில் பசலைக்கீரை போல் உடலுக்கு நன்மை தரும் கீரை வேறெதுவும் இல்லை. இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் எல்லாமே இதில் அதிகம்.

 

 

பசலைக்கீரை இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு வரும் சில நரம்பு வியாதிகளை வராமல் தடுக்கிறது. இக்கீரையிலுள்ள சில ரசாயனப் பொருட்கள் பார்வைக் குறைவை தடுக்கிறது. 

 

 

இதில் மிக அதிகமாக உள்ள பச்சையம் கொழுப்பை கரைக்கும் தன்மையுடையது. ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தி செய்கிறது. ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உடலின் செல்களுக்கு தந்து அங்கிருந்து கரியமிலவாயுவை வெளியேற்றுகிறது.

 

 

இக்கீரை குளிர்ச்சி தருவதில் சிறந்தது. எனவே நீர் உடலினர் அடிக்கடி சாப்பிடக் கூடாது. இதை உபயோகிப்பதால் உடல் தொற்று பெருமளவில் தடுக்கப்படுகிறது. மேலும் இது வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும். 

 

 

 

 

 

 

 

 

 

 

பிரண்டையின் மருத்துவப் பயன்கள்

 

பிரண்டை உடலைத் தேற்றும். பசியைத் தூண்டும். 

 

 

துவையலை சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வர இரத்த மூலம் குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும்.

 

 

பிரண்டைத் துவையல் செய்து நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள பழகிக் கொண்டால் உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும். ஞாபக சக்தி பெருகும். மூளை நரம்புகளும் பலப்படும்.

 

 

நன்றாக முற்றிய பிரண்டைத் தண்டுகளைச் சிறு துண்டுகளாக நறுக்கி மோரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ஊற வைத்து உலர்த்தி வற்றலாக செய்து கொள்ள வேண்டும் இந்த வற்றலை எண்ணெயில் பொரித்துச் சாப்பிட பசியின்மை, நாக்குச் சுவையின்மை ஆகியன குணமாகும்.

 

 

பிரண்டையில் இருந்து சாறு எடுத்து 6 தேக்கரண்டி அளவு சாற்றுடன் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு வர மாதவிடாய் பிரச்சனை தீரும்.

 

 

பிரண்டைத் துவையலைக் குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வர எலும்புகள் உறுதியாக வளரும். மேலும், எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் கூடவும் இது உதவுகிறது.

 

 

மேலும் பிரண்டையை நன்கு காய வைத்து தூளாக்கி வைத்துக் கொண்டு நீரில் குழைத்து எலும்பு முறிவுள்ள பகுதியில் பூசி வரலாம்.

 

 

பிரண்டையின் வேரை உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு காலை மாலை வேளைகளில் பத்து கிராம் அளவு சாப்பிட்டு வரவேண்டும். 

 

 

 

 

 

 

 

 

 

புதினாவின் மருத்துவப் பயன்கள்

 

அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்குகிறது. இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். பசியை தூண்டும். மலச்சிக்கல் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது.

 

 

புதினாவை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும். ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது.

 

 

மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் இதன் சாரை முகத்தில் தடவி வர பலன் கிடைக்கும்.

 

 

சிறுநீர் கழிப்பதில் எரிச்சல் உள்ளவர்கள் புதினாக் குடிநீர் தயார் செய்து குடித்து வர எரிச்சல் குறையும்.

 

 

புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்துக் குடித்தால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும். புதினாக்கீரை கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்தக் கூடியது.

 

 

மூச்சுத்திணறல் குணமாக, புதினா இலையைச் சிறிதளவு எடுத்து மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின் இந்த நீரை குடித்தால் மூச்சுத்திணறல் நீங்கும்.

 

 

புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து, சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகு மறைந்துவிடும். கூந்தலும் பட்டுபோல் பளபளக்கும்.

 

 

 

 

 

 

 

 

 

 

புளிச்சக்கீரையின் மருத்துவப் பயன்கள்

 

புளிச்சக்கீரையின் கனியில் வரும் சாறு சர்க்கரை மற்றும் மிளகுடன் சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் மற்றும் வயிற்று நோய்கள் குணமாகிறது.

 

 

விதைகள் பால் உணர்வுகi

 

ளத் தூண்டிவிக்கிறது.

 

 

உடல் வலியைப் போக்க மேல் பூச்சாக பயண்படுகிறது.

 

 

இலைகள் வயிற்றுப்போக்கைத் தூண்டும்.

 

 

இதில் நார்ச்சத்து உள்ளதால் உடல் வலிமை பெறும்.

 

 

 

 

 

 

பொன்னாங்கன்னி கீரையின் மருத்துவப் பயன்கள்

 

மூல நோய், மண்ணீரல் நோய்களை குணப்படுத்த ஏற்றது.

 

 

பொன்னாங்கன்னி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

 

 

வாரம் இரு முறை சாப்பிட்டு வந்தால் உடலும், தோலும் பளபளவென்று மாறிவிடும்.

 

 

பொன்னாங்கன்னி கீரையை நன்றாக அலசி சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டுவந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும், உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.

 

 

அதிக வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கும், கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும் கண்கள் சிவந்து காணப்படும், கண்களில் எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும்.இவர்கள் பொன்னாங்கன்னி கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் இப்பிரச்சினை நீங்கும்.

 

 

பொன்னாங்கன்னி கீரை வாய் துர்நாற்றத்தை நீக்கும். இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு ஊட்டும்.

 

 

 

 

 

 

 

 

 

மணத்தக்காளி கீரையின் மருத்துவப் பயன்கள்

 

மணத்தக்காளி வற்றல் வாந்தியைப் போக்கி பசியின்மையைப் போக்கும்.

 

 

மணத்தக்காளி கீரைக்கு குரலை இனிமையாக்கும் குணமும் உண்டு. 

மணத்தக்காளி கீரையை உணவுடன் சேர்த்து எடுத்துக்கொண்டால் உடல் குளிர்ச்சியடையும். குறிப்பாக பூப்பெய்திய காலத்தில் சிறுமிகளுக்கு கொடுத்து வரலாம்.

 

 

வாரம் இரு முறை மணத்தக்காளியை உண்டு வர கடுமையான உழைப்பின் காரணமாக உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் புண்களைப் போக்கலாம்.

 

 

இருதயத்தின் செயல்பாடு வலிமை கூடும். களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தைக் கொடுக்கும்.

 

 

மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் அளிக்கும். கண்பார்வை தௌpவு பெறும்.

 

 

வயிற்றில் பூச்சி ஏற்பட்டால் மணத்தக்காளி அதனை வெளியேற்றும்.

 

 

மணத்தக்காளியின் வேர் மலச்சிக்கலை நீக்கும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

 

 

 

 

 

 

 

 

 

 

முருங்கைக் கீரையின் மருத்துவப் பயன்கள்

 

முருங்கைக்கீரையோடு, பூண்டு, மஞ்சள், உப்பு, மிளகு சேர்த்து அரைத்து உண்டால் நாய்க்கடி குணமாகும்.

 

 

முருங்கைக்கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.

 

 

வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும்.

 

 

முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றது.

 

 

இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டியாகும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும். தோல் வியாதிகள் நீங்கும்.

 

 

முருங்கைக்கீரை மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக்கீரையை உணவாக உபயோகித்தால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது.

 

 

முருங்கைக்கீரை சூப் மூட்டு வலியையும் போக்க வல்லது.

 

 

கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவித்து பிரசவத்தை துரிதப்படுத்தும். முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.

 

 

ஆஸ்துமா, மார்பு சளி போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கைக்கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு.

 

 

 

 

 

 

 

 

 

 

 

முடக்கத்தான் கீரையின் மருத்துவ பயன்கள்

 

முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகின்றன.

 

 

இந்தக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும். முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி உட்கொண்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

 

 

இந்தக் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி நிற்கும். கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.

 

 

வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை நல்லது. பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளுக்கு இந்தக் கீரையின் சாறு ஒரு மேஜைக்கரண்டி போதும். இந்தக் கீரையை அரைத்து கர்ப்பிணிப் பெண்களின் அடிவயிற்றில் கட்டினால் சுகப்பிரசவமாகும்.

 

 

முதுகு தண்டுவடம் தேய்மானம் இருப்பவர்கள், மாதவிலக்கு நின்ற பிறகு பெண்களுக்கு ஏற்படக் கூடிய எலும்புத் தேய்மானம், எல்லாவிதமான மூட்டுவாதம், மூட்டுவலிகளைக் குணப்படுத்தும். இந்த நோய்கள் வருவதற்கு முன்பே சாப்பிட்டால் வராமல் தடுக்கலாம். 40 வயது தொடங்கியவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்லது.

 

 

இதனைச் சாப்பிடத் தொடங்கும்போது முதல் ஒன்று இரண்டு நாட்களுக்கு சிலருக்கு மலம் பேதி போன்று போகும். ஆனால் பயப்படத் தேவையில்லை. தொடர்ந்து சாப்பிடலாம். மூளைக்கு பலம் தரும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

முள்ளங்கி கீரையின் மருத்துவ பயன்கள்

 

இரைப்பைக் கோளாறுகள், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள், மூலக்கடுப்பு, மஞ்சள் காமாலை போன்றவைகளையும் குணப்படுத்துகின்றன.

 

 

நீரிழிவு நோய்க்கும் இது சிறந்த மருந்தாக உள்ளது.

 

 

மலச்சிக்கலைக் குணப்படுத்தும் ஆற்றல் இந்தக் கீரைக்கு உண்டு. கல்லீரலில் உண்டாகும் பலவிதமான கோளாறுகளை இக்கீரை குணப்படுத்த வல்லது! அதுபோல் இருதயத்திற்கும் பலம் சேர்க்கக்கூடியதாக உள்ளதால் இதயம் பாதிக்கப்பட்டவர்கள், இதயப் படபடப்பு, இதய பலவீனம் உடையவர்கள் வாரம் ஓரிரு முறையாவது இக்கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

 

 

கண் பார்வை பலப்படும். வைட்டமின் பற்றாக்குறைகளும் நீங்கும்.

 

 

முள்ளங்கிக் கீரையின் சாற்றை 5 அல்லது 6 டீஸ்பூன் அளவு எடுத்து, 3 வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்துவிடும். 

 

 

சிறுநீர்ப்பை வீக்கம் இருந்தாலும் குணமாகும். சிறுநீர் கல்லடைப்பு, கரப்பான் என்ற தோல் வியாதிகளையும் குணமாக்கும்.

 

 

 

 

 

 

 

 

 

 

முளைக்கீரையின் மருத்துவ பயன்கள்

 

முளைக்கீரையில் வைட்டமின்களும், தாது உப்புக்களும் அதிக அளவில் இருக்கின்றன. குறிப்பாக சுண்ணாம்புச் சத்து நிறைய இருக்கிறது.

 

 

மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்தக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

 

 

முளைக்கீரை உணவுக்குச் சுவையூட்டுவதுடன் பசியையும் தூண்டுகிறது. முளைக்கீரையை நன்கு கழுவிச் சிறிது வெங்காயம், புளி, பச்சை மிளகாய், உப்பு ஆகியவை சேர்த்து வேக வைத்துக் கடைந்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் உடல்சூடு, ரத்தக் கொதிப்பு, பித்த எரிச்சல் ஆகிய நோய்கள் குணமாகும். அதோடு கண்ணும் குளிர்ச்சியடையும்.

 

 

முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவதால், சொறி, சிறங்கு முதலிய நோய்கள் குணமாகின்றன. இந்தக் கீரை வெப்ப சுரத்தைத் தணிக்கிறது.

 

 

முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் உடலுக்குப் போதிய அளவில் கிடைக்கும். முளைக் கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிர சத்துக்கள் இரத்தத்தை சுத்தம் செய்து உடலுக்கு அழகையும் மெருகையும் ஊட்டுகின்றன.

 

 

முளைக்கீரை காச நோயின் துன்பத்திலிருந்து விடுபட வைக்கும்.

 

 

 

 

 

 

 

 

 

 

வல்லாரை கீரையின் மருத்துவ பயன்கள்

 

இரத்த சுத்திகரிப்பு செய்ய இந்தக் கீரை பயன்படுகிறது 

 

 

உடல்புண்களை ஆற்றும், வல்லமை கொண்டது.

 

 

தொண்டைக்கட்டு, காய்ச்சல், சளி குறைய உதவுகிறது, உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமை கொண்டது.

 

 

மனித ஞாபகசக்தியை வளர்க்கும் வல்லமை கொண்டது.

 

 

இதனைக் கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும்.

 

 

நரம்பு தளர்ச்சியை குணமாக்கி, மூளைச் சோர்வை நீக்கி சிந்திக்கும் திறனை அதிகரிக்கும்.

 

 

அஜீரணக் கோளாறுகளை குறைக்கும். கண் மங்கலை சரி செய்யும்.

 

 

இது தவிர நாள்பட்ட எக்சிமா, பால்வினை நோய்கள் வெண்குஷ்டம் போன்ற பல நோய்களுக்கும் வல்லாரை அருமருந்தாக விளங்குகிறது.

 

 

பிரசவத்திற்கு பின் தாயின் உடல்நிலை தேறுவதற்கு வல்லாரை இலைகளை இடித்து சாறெடுத்து, பனங்கற்கண்டோடு சேர்த்து கொடுக்கும் வழக்கம் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் உள்ளது.

 

 

சொறி, சிரங்கு, மாரடைப்பு, மாலைக்கண், நீரிழிவு, காக்கை வலிப்பு, காய்ச்சல், பைத்தியம் போன்ற நோய்களையும் வல்லாரை குணப்படுத்துகின்றது.

 

 

வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண், குடல் நோய், வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவை அகலும்.

 

 

வல்லாரை கீரை பொதுவாக மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. ஞாபக சக்தியை வளர்க்கிறது. நரம்புத் தளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. இருதய பலத்துக்கும், தாது விருத்திக்கும் உதவுகின்றது.

 

 

 

 

 

 

 

 

 

 

வெந்தயக் கீரையின் மருத்துவப் பயன்கள்

 

இதில் இரும்புச் சத்துப் பொருட்கள் அதிக அளவில் இருக்கின்றன. இரும்புச் சத்துப் பொருட்கள் உடலில் ஏற்படும் ரத்தசோகை நோயான அனீமியா வராமல் தடுப்பதோடு, உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும்.

 

 

ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவுகளை சீரான விகிதத்தில் பாதுகாக்க வெந்தயக்கீரை உதவுகிறது.

 

 

வைட்டமின் - ஈ சத்துப் பொருட்கள் கணிசமான அளவில் நிறைந்துள்ளன. இவை கண்களின் பார்வைத் திறனை அதிகரிப்பதோடு, பார்வைக் கோளாறுகளை சரி செய்யவும் உதவுகின்றன.

 

 

வெந்தயக் கீரை தினசரி உணவில் சேர்ப்பது உடலில் ஏற்படும் புரதக் குறைபாட்டை நீக்கி உடலுக்கு வலிமை சேர்க்கும்.

 

 

கீரையில் உள்ள புரதப்பொருட்கள் பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க வல்லது.

 

 

பொட்டாசியம், சோடியம் போன்ற சத்து பொருட்கள் குறிப்பிட்ட அளவுகளில் இருப்பதால் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

பாலக் கீரையின் மருத்துவ பயன்கள்

 

பாலக் கீரையுடன் வேப்பிலை, ஓமம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் பெருவயிறு குறையும்.

 

 

நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த கீரை மிகவும் சிறந்தது. ஏனெனில் இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை நிலையாக வைத்திருக்க இந்த கீரை உதவுகிறது.

 

 

புற்று நோய் செல்கள் உருவாகாமல் தடுத்து நிறுத்த கூடியது. பாலக் கீரை ரத்த சிவப்பு அணுக்களை அதிகமாக உற்பத்தி செய்வதால் இது அனிமீயா நோய் வராமல் தடுக்க உதவுகிறது.

 

 

பாலக் கீரையில் போலிக் ஆசிட் அதிகளவில் உள்ளதால் கர்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது.

 

 

குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த கீரையை அதிகம் சாப்பிட்டால் பால் அதிகம் சுரக்கும். பாலக்கீரையில் வைட்டமின் ஏ அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது.

 

 

இதில் மெக்னீசியம், ஜிங்க், காப்பர் மற்றும் விட்டமின் - கே அதிகம் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக உதவுகின்றன.

 

 

இந்த கீரையில் புரத சத்து நிறைந்துள்ளது, எனவே இந்த கீரையை தினமும் எடுத்து கொண்டால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.

 

 

கண் பார்வை நன்றாக தெரிய இந்த கீரை உதவி செய்கின்றன. இதனை சிறுபருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிடலாம்.

 

 

 

 

 

 

 

 

 

 

பீட்ரூடின் மருத்துவப் பயன்கள்

 

பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

 

 

பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

 

 

பீட்ரூட் கசாயம் மூலநோயை குணப்படுத்தும். பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.

 

 

பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும். இரத்த சோகையை குணப்படுத்தும்.

 

 

பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

 

 

 

 

Thanks and regards 

A s Govinda rajan 

17/5 Sri andal flats andavar nagar second Street Kodambakkam Chennai