tamilnadu epaper

சோகத்தூர் ஸ்ரீ யோக நரசிம்மர் கோவிலில் ஸ்வாதி திருவிழா

சோகத்தூர் ஸ்ரீ யோக நரசிம்மர் கோவிலில் ஸ்வாதி திருவிழா


 வந்தவாசி , ஏப் 18:


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சோகத்தூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அமிர்த வல்லி நாயிகா சமேத ஸ்ரீ யோக நரசிம்மர் திருக்கோயிலில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் நரசிம்ம மூர்த்திக்கு ஸ்வாதி விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. மேலும் பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. பிறகு புதிய வஸ்திரம், பூமாலைகள் சாற்றப்பட்டு மகா தீபாராதனை நடந்தேறியது. யாக குண்டம் அமைக்க பெற்று யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து சாத்துமுறை நடைபெற்று, அன்னதானம் நடைபெற்றது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.