நியூஸிலாந்து அணிக்கெதிரான மினி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய அணி டாஸ் இழந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்மூலம் இந்தியா தொடர்ந்து 15ஆவது முறையாக ஒருநாள் போட்டிகளில் டாஸ் தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக ரோகித் சர்மாவின் தலைமையில் இந்தியா தொடர்ந்து 12ஆவது முறையாக டாஸ் தோல்வியை சந்தித்துள்ளது. இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து அதிகமுறை டாஸ் தோல்வியை சந்தித்த கேப்டன் என்ற வேதனையான சாதனையில் மேற்கு இந்தியத் தீவுகளின் முன்னாள் வீரர் பிரையன் லாராவுடன் ரோகித் சர்மா இணைந்துள்ளார்.