tamilnadu epaper

டிரம்பின் உக்ரைன் கொள்கை: சீனா எதிர்ப்பு மனநிலை

டிரம்பின் உக்ரைன் கொள்கை: சீனா எதிர்ப்பு மனநிலை

பிப்ரவரி 18-ல், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் சவுதி அரேபியா வின் ரியாத்தில் சந்தித்தனர். இந்த பேச்சுவார்த்தை யின் முக்கிய நோக்கம், உக்ரைன் இல்லாமல் உக் ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் உத்தியை பலப்படுத்துவதாகும். டிரம்ப், உக்ரைன் ஜனாதி பதி ஜெலன்ஸ்கியை ஒரு சர்வாதிகாரி என்று குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த ஜெலன்ஸ்கி, டிரம்ப் பல புரளிகளின் உலகில் வாழ்கிறார் என்று கூறி னார். அமெரிக்காவின் யுத்த எதிர்ப்பு இயக்கங்கள், உக்ரைன் போருக்கு அமெரிக்கா அளிக்கும் ஆத ரவை எதிர்த்து வருகின்றன. பதில் கூட்டணி (ANS WER COALITION) என்ற குழு, அமெரிக்காவின் யுத்த கொள்கைகளை கடுமையாக விமர்சித்து, நேட்டோ கூட்டணியை கலைக்க கோரிக்கை விடுத்துள்ளது. இவர்களின் கூற்றுப்படி, அமெரிக்காவின் வெளி யுறவு கொள்கை சீனா மற்றும் ரஷ்யாவை எதிர்த்து மூர்க்கத்தனமாக மாறியுள்ளது.