tamilnadu epaper

தச்சன்குறிச்சி குகைவாழ் ராஜ பாலதண்டாயுதபாணி ஆலயம்*

தச்சன்குறிச்சி குகைவாழ் ராஜ பாலதண்டாயுதபாணி ஆலயம்*

தஞ்சாவூரிலிருந்து 26 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தச்சன்குறிச்சி என்ற ஊரில் அமைந்துள்ள குகைவாழ் ராஜ பாலதண்டாயுதபாணி ஆலயம் பற்றி அறிந்து கொள்வோமா?

 

தஞ்சையை ஆண்ட சோழர்கள் காலத்து குகைவாழ் ராஜ பாலதண்டாயுதபாணி ஆலயம் 

பதினெட்டு சித்தர்களில் ஒருவரான போகர் சித்தரால் முருகன் சிலை உருவாக்கப்பட்டு கருவூரார், பாம்பாட்டி சித்தர், கொங்கணர், கோரக்கர் சித்தர் மற்றும் ராகவேந்திரர் சுவாமிகள் ஆகியோர் பூஜித்த முருகர். 

 

அரசங்குறிச்சி மலை குகையில் சோழமன்னரால் வழிபாடு செய்யப்பட்டு குகையில் பாதுகாக்கப்பட்டது இந்த முருகன் சிலை.சோழ வரலாற்றில் மிக முக்கியமான இந்த முருகன் ஆலயம் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். இந்த மலையைக் குடைந்து குகையாக அமைத்து சோழ தேசத்தின் முக்கிய ஆலயங்களுக்கு செல்லும்படி பாதை வகுத்துள்ளனர்.தஞ்சாவூர் பெரிய கோயிலின் திருப்பணிக்கு எடுக்கப்பட்ட சுக்கான் பாறை கொண்ட மலையான இந்த பகுதி ஆரம்ப காலத்தில் அரசங்குறிச்சியாக இருந்து காலப்போக்கில் தச்சன்குறிச்சி என விளங்கி வருகிறது.

 

இந்த மலைக் குகையில் முருகனை வைத்து போர்க்குடி தெய்வமாக வழிபட்டு வந்திருக்கிறார்கள்.ஆண்டுகள் பல கடந்து குகையில் மூடிக்கிடந்த முருகனை குகையில் இருந்து வெளியே எடுத்து சிறு ஆலயம் எடுப்பித்து வழிபட்டு வந்திருக்கிறார்கள்.

 

பெரிதாக யாருக்கும் வெளியே தெரியாமல் பெரிய அளவில் வழிபாடு இன்றி பங்குனி உத்திரத்திற்கு மட்டும் ஊர்மக்கள்

 வழிபட்டு வந்தள்ளனர் . ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையை சேர்ந்த ஒருவர், தான் கனவில் கண்ட இந்த ஆலயத்தை தேடிக் கண்டுபிடித்து வழிபாடு செய்யத் துவங்கியுள்ளார்.அவர் பூஜையின்றி கிடந்த இந்த ஆலயத்தில் ஏழு ஆண்டுகளாக செவ்வாய் கிழமை தோறும் பூஜை செய்ய துவங்கினார்.அந்த காலகட்டத்தில் சிலர் வெள்ளி கவசம் சாற்ற வேண்டி இறைவனிடம் உத்தரவு கேட்டபோது முருகன் உத்தரவு தரவில்லை.கடந்த 2023 ஆம் ஆண்டு தஞ்சையை சேர்ந்த அந்த நபர் வெள்ளி கவசம் செய்ய உத்தரவு கேட்ட போது முருகன் உத்தரவு கொடுத்துள்ளார் . 

 

அதன் பின் அவருடைய நண்பர்கள் 6 பேர்‌ சேர்ந்து அதற்கான பணியைச் செய்து முருகனுக்கு காப்பு கட்டி வெள்ளிக்கவசத்தோடு ருத்ர திரிசதி யாகம் செய்து ஊர்கூடி காவடி எடுத்து 33 தாம்பூலம் சீர்வரிசையோடு மங்கள வாத்தியம் முழங்க வெள்ளி கவசம் சாற்றுமாறு முருகன் இட்ட உத்தரவின் பேரில் சகலமும் முருகனின் அருளால் ஏற்பாடு செய்து கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் நாள் முருகனுக்கு வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டது. 

 

அதன் பின்னர் ஒருவர் மூலமாக 21 நாள் சத்ரு சம்ஹார யாகமும் பின்னர் திண்டுக்கலைச் சேர்ந்த ஒருவர் மூலமாக முருகன் கேட்டு முருகனின் அருளால் 48 ஆம் நாள் மகா ஸ்கந்த யாகமும், முருகனின் அருளால் சிறப்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. 

 

அதனைத் தொடர்ந்து ஒவ்வொருவர் கனவிலும் முருகன் தோன்றி அவருக்குத் தேவையான யாக பூஜைகளைப் பெற்றுக் கொண்டார்.66 நாள் வரை தொடர்ந்து எண்ணெய் காப்பும் பால் அபிஷேகமும் மட்டுமே நடைபெற்று தினமும் நைவேத்யம் படைக்கப்பட்டது.66 ஆம் நாள் முருகன் கேட்டு ஒன்பது நாட்டு பசுக்கள் வைத்து கோபூஜையும் லெட்சுமி பூஜையும் நடைபெற்று அனைத்து அபிஷேகப் பொருட்களும் ஆறு கிலோ வீதத்தில் அபிஷேகமும் பசும்பால் 300 லிட்டரும் அபிஷேகம் செய்யப்பட்டு சுமார் 2000 மக்களுக்கு மேல் கலந்து கொண்டு முருகன் அருள் பெற்றனர். 

 

அன்றைய தினம் முருகனுக்கு காப்பு கழற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள ஒரு நபருக்கு கனவில் தோன்றி 108 ஆம் நாள் 108 கிலோ நாட்டுப் பசுஞ்சாண விபூதி கொண்டு 108 விபூதி கலசாபிசேகமும் வாஸ்து பூஜையும் செய்து விபூதி அலங்காரத்தில் முருகன் காட்சி தந்தார்.கொரோனா காலத்திலும் தங்கு தடையின்றி சிறப்பாக பூஜைகள் நடைபெற்ற அற்புதமான ஆலயம்.

 

ஒவ்வொரு செவ்வாய்கிழமை தோறும் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், அன்னதானமும் நடைபெற்று வருகிறது.

அமாவாசை,பௌர்ணமி நாட்களில் இரவு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது மற்றும் சஷ்டி, கிருத்திகை நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

 

இந்த ஆலயத்தில் நைவேத்யம் என்பது 9 வகை உணவு.அபிஷேகத்திற்கு சுத்தமான நல்லெண்ணெய்,பசும்பால்,பசுந்தயிர் மட்டுமே பயன்படுத்தபடுகிறது.

 

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை அமாவாசை, பௌர்ணமி நாட்களில் சர்ப்பம் ஒன்று முருகன் கழுத்தில் சுற்றிக்கொண்டு முருகனை தரிசனம் செய்து விட்டு உடனே மறைந்து விடும் அதிசயத்தை ஊர்மக்கள் கண்டு வியந்திருக்கிறார்கள்.

 

குகைவாழ் ராஜ பாலதண்டாயுதபாணி சுவாமியை சேவல் ஒன்று தினமும் கருவறைக்கு சென்று தரிசனம் செய்து வருகிறது.

 

தினமும் முருகன் முன்பு மயில் ஒன்று நடனமாடி வருகிறது.

 

உடற்பிணி நீக்கும் மருந்தாக அபிஷேக பால் மற்றும் விபூதி வழங்கப்படுகிறது.கோவிலில் ஒர் இரவு தங்கி அதனை உணரலாம்.

 

மூன்று அல்லது ஒன்பது செவ்வாய்கிழமைகள் குகைவாழ் ராஜ பாலதண்டாயுதபாணி சுவாமியை மனம் உருகி தரிசனம் செய்தால் வேண்டுதல் நிறைவேறுவது நிச்சயம்!!

 

ஆலயத் தொடர்புக்கு:9486827087

 

*-ம.பாஸ்கர்,தஞ்சாவூர்.*