விழுப்புரம், ஏப். 7–
'கள்' மீதான தடையை நீக்க கோரி, 'கள்' குடித்தபடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
'கள்' மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தியும், பனை ஏறும் தொழிலாளர்கள் மீது, சட்டத்திற்கு புறம்பாக பொய் வழக்குகள் பதிவு செய்வதை கண்டித்தும், தமிழகம் முழுவதும், தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் நகராட்சி திடலில், நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, இயக்க ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, கள் என்பது உணவு, அது போதைப்பொருள் இல்லை என்பதை, உணர்த்துவதற்காக, ஆண், பெண் தொழிலாளர்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த கள்ளை குடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.