சென்னை, மே 25–
அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்தி குறிப்பு:
தமிழக அரசின் 5-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அரசு போக்குவரத்துக் கழகங்களின் 214 புதிய பஸ்கள் இயக்கத்தை மக்கள் பயன்பாடுக்காக முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், 27 புதிய விரைவு பஸ்கள் இடம் பெற்றிருந்தன. இதில் 23 புதிய அதிநவீன குளிர்சாதன பஸ்கள் தற்போது பயன்பாடுக்கு வந்துள்ளன.
இவற்றில் திருச்சி– திருப்பதிக்கு 2, சென்னை கிளாம்பாக்கம்– பெங்களூருக்கு 4, கோயம்பேடு– பெங்களூர் 2, சென்னை கிளாம்பாக்கம்– திருச்செந்தூர், திருவான்மியூர்– திருச்செந்துார், மன்னார்குடி– சென்னை, காரைக்குடி– சென்னை, ஈரோடு– சென்னை, மதுரை– சென்னை, நெல்லை– சென்னைக்கு தலா 2 பஸ்கள், திருச்சி– சென்னைக்கு ஒரு பஸ் என வழித்தடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.