tamilnadu epaper

தமிழில் பெயர் வைக்காத கடைகளுக்கு அபராதம் உயர்வு

தமிழில் பெயர் வைக்காத  கடைகளுக்கு அபராதம் உயர்வு


சென்னை, ஏப். 22–

தமிழில் பெயர் வைக்காத கடைகளுக்கு அபராதம் ரூ.500ல் இருந்து 2000 ஆக அதிகரிக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பாக சட்டசபையில் நேற்று தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயரில் வைக்கும் நடைமுறையை முறையாக பின் பற்ற நடவடிக்கை எடுக்குமா என்று இனிகோ இருதயராஜ் கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் சுவாமிநாதன் பதில் அளிக்கையில்," கடைகளில் தமிழில் பெயர் வைப்பது தொடர்பாக தொழிலாளர் நலத்துறையிடம் பேசி இருக்கிறோம். தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு அபராதம் ரூ.500 ல் இருந்து ரூ.இரண்டாயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து வணிகநிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.