திருக்காட்கரை*(எர்ணாகுளம் கேரளா)
மூலவர் : காட்கரையப்பன்
தாயார் : பெருஞ்செல்வ நாயகி, வாத்ஸல்ய வல்லி
நின்ற திருக்கோலம்
வாமன மூர்த்திக்கு அமைந்துள்ள சில கோயில்களில் இதுவும் ஒன்று. வட்ட வடிவ கேரள பாணியில் அமைக்கப்பட்டுள்ள இக்கோயிலை பரசுராமர் கட்டியதாகக் கூறப்படுகிறது.
மன்னர் மகாபலி சக்கரவர்த்தியை, திருமால் வாமன அவதாரம் எடுத்து நிலத்தில் அழுத்தி அழித்த இடமாக இருப்பதால் இத்தலம் கூடுதல் முக்கியத்துவத்தைப் பெறுகிறது. இத்தலத்தை நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.
திருமால், வாமன அவதாரம் எடுத்து மகாபலிக்கு நற்கதி வழங்கிய திருவோணத் திருநாளை தீபாவளியைப் போல் புத்தாடை அணிந்து, குதூகலமாய் கொண்டாடுகின்றனர். மஹாவிஷ்ணு சங்கு, சக்கர, கதை, பத்ம (தாமரை) ஏந்தி கொண்டு இருக்கின்ற நான்கு திருக்கரங்களோடு மகாபலிக்கு காட்சி கொடுத்த திருக்கோலத்தில் இங்கு எழுந்தருளியுள்ளார்.
கீதா ராஜா சென்னை