திருச்சிராப்பள்ளி, ஏப்.10 -
வெளிநாட்டில் இருந்து திருச்சி விமான நிலையத் திற்கு தங்கம், வெளிநாட்டு பணம் மற்றும் பொருட்கள் கடத்தி வரும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் திருச்சியில் நான்கு பயணிகளிடம் வெளிநாட்டு பணம் சிக்கி உள்ளது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜா செல்ல விருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 4 பயணிகள் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூ.19,05,200 மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் (சவுதி ரியால்) பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து பயணி களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.