tamilnadu epaper

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  இந்துக்களுக்கு மட்டுமே வேலை


திருமலை, மார்ச் 22–

 ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு நேற்று அவரது பேரன் பிறந்தநாளை முன்னிட்டு ,குடும்பத்துடன் திருப்பதி திருமலை கோவிலில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 

  என் மீது பல தாக்குதல்கள நடத்த குறிவைக்கப்பட்டது. 23 கிளைமோர் கண்ணி வெடிகளால் தான் குறி வைக்கப்பட்டேன். அந்த தாக்குதலில் இருந்து தப்பிப்பது சாத்தியமில்லை. ஆனால் அத்தகைய தாக்குதலில் இருந்து தப்பிப்பத்ததற்கு காரணம், வெங்கடேஸ்வரரின் தெய்வீக அருளால் மட்டுமே. வெங்கடேஸ்வரரால் மட்டுமே உயிர் பிழைத்தேன். நான் உயிர் பிழைத்தது இறைவனின் மகத்தான சக்தியை நிரூபிக்கிறது.

 திருமலை கோவிலில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள். பிற மதங்களைச் சேர்ந்த நபர்கள், தற்போது அங்கு பணிபுரிந்தால், அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் அவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவார்கள். உலகம் முழுவதும் ஏழுமலையான் கோயில்களை கட்டுவதற்காக புதிய அறக்கட்டளை உருவாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.