tamilnadu epaper

திருவண்ணாமலை ஆலயச் செய்திகள்

திருவண்ணாமலை ஆலயச் செய்திகள்

திருமாலும் பிரம்மாவும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத மலை .அதனால் திருவண்ணாமலை .( அண்ணா- நெருங்க முடியாத) திரு அண்ணாமலை என்பதே சரியானது. மலையின் உயரம் 2668 அடி.கிருத யுகத்தில் அக்னி மலை. திரேதா யுகத்தில் மாணிக்க மலை.துவாபரா யுகத்தில் தங்கமலை.இப்போது நடைபெறும் கலியுகத்தில் கல்மலையாகக் காட்சியளிக்கிறது 

 

   கடலில் மூழ்கியதாக சொல்லப்படும் லெமூரியா கண்டத்தின் ஒரு பகுதியே இது என்று பால் பிரண்டன் 

Message from Arunachala என்ற நூலில் ஆதாரங்களுடன் கூறியுள்ளார்.

 

இமயமலையை விட இந்த மலை மிகப் பழமையானது என்றுஆதாரங்களுடன் நிரூபித்திருக்கிறார் புவியியல் வல்லுனரான பீர்பால் சகானி.

 

     கோவிலின் பரப்பளவு சுமார் 25 ஏக்கர். கோயிலில் உள்ள ஒன்பது கோபுரங்கள் : 

1.ராஜகோபுரம் 

2.வல்லாள மகாராஜா கோபுரம் 

3.அம்மணியம்மாள் கோபுரம் 

4.கிளி கோபுரம்

5.மேல கோபுரம் ( இந்தப் பெயர் திரிந்து 

பேய் கோபுரம் என்று இப்போது அழைக்கப்படுகிறது )

6.மேற்கு கட்டைகோபுரம்

7.தெற்கு கட்டை கோபுரம்

8.திருமஞ்சன கோபுரம்

9.வடக்கு கட்டை கோபுரம் 

 

 

 

 

இந்த ஒன்பது கோபுரங்களையும் கோயிலின் உள்ளே அமைந்துள்ள தல விருட்சமான மகிழ மரத்தின் அருகில் இருந்து ஒரு சேர தரிசிக்கலாம்.

 

     இங்குள்ள மண்டபங்கள் :

1.ஞானப்பால் மண்டபம்

2.தீர்த்த வாரி மண்டபம்

3.திருவருள் விலாச மண்டபம் 

4.மாதப்பிறப்பு மண்டபம்

5.உத்ராட்ச மண்டபம் 

 6.அமாவாசை மண்டபம்

7.பன்னீர் மண்டபம்

8.காட்சி மண்டபம்

9.திருக்கல்யாண மண்டபம்.

 

இங்குள்ள பிரகார மதில்கள் :

1.வீரக்காரன் திருமதில்

 2.வசந்த ராயன் திருமதில்

 3.திருவேகம்பமுடையான் திருமதில். இந்த மதில்களின் உயரம் சுமார் 30 அடி. நீளம்1500 அடி . அகலம் 900 அடி .

 

   கிழக்கு வாயிலான ராஜகோபுரத்தின் உள் நுழைந்து சென்றால்

வலப்புறம் இருப்பது ஆயிரம் கால் மண்டபம் ஆகும். கிருஷ்ணதேவராயர் இந்த மண்டபத்தை கட்டியதாக சொல்வதுண்டு.

 

ஆயிரம் கால் மண்டபத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ள பாதாள லிங்கம் இங்கு ரமண மகரிஷி சில காலம் தவத்தில் ஆழ்ந்திருந்தார்.

 

ஆயிரம் கால் மண்டபத்தின் எதிரே உள்ளது கம்பத்து இளையனார் சன்னதி. இந்த மண்டபத்தில் அருணகிரிநாதரின் பாடலுக்கு இரங்கி பிரபுடதேவ மகாராஜனுக்கு முருகப்பெருமான் காட்சியளித்தாராம்.

 

சிவகங்கை தீர்த்தம் :

கம்பத்து இளையனர் சன்னதிக்கு தெற்கே இத்திருக்குளம் அமைந்துள்ளது 

 

பெரிய நந்தி:

இவற்றைக் கடந்து உள்ளே செல்வதற்கு முன்னால் ஆறடி நீளம் உள்ள நந்தி உள்ளது. இது வல்லாள மகாராஜனால் கட்டப்பட்டது என்று சொல்வதுண்டு. இந்த நந்திக்கு ஒவ்வொரு பிரதோஷத்தன்றும் மிகவும் விமர்சையாக பூஜை நடைபெறுவதுண்டு. 

 

கோபுரத்து இளையனார் :

 

இந்தக் கோயில் நந்தி

மண்டபத்துக்கு எதிரில் உள்ளது. இங்கு முருகப் பெருமான் அருணகிரிநாதரை தாங்கி அருள் பாலித்ததாக கூறுவார்கள்.

 

வல்லாள மகராசா கோபுரம் :

 

இவருடைய சிலை கோபுரத்தின் தெற்கு பக்கத்தில் உள்ளது. மாசி மகத்தன்று இவருக்கு தீர்த்தவாரி செய்ய அண்ணாமலையார் இன்றும் பள்ளிகொண்டா பட்டு செல்கிறார்.

 

கல்யாண சுந்தரர் சன்னதி :

வல்லாள மகாராஜா கோபுரத்தின் தெற்கு திசையில் இது உள்ளது. இங்கு திருமணங்கள் நடைபெறுகின்றன.

 

காலபைரவர் :

 

நான்காம் பிரகாரத்தில் இது அமைந்துள்ளது. கால பைரவர் நின்ற நிலையில் காணப்படுகிறார்.

 

இதையடுத்து பிரம்ம தீர்த்தம் புரவி மண்டபம் கிளிகோபுரம் ,காட்சி மண்டபம் (தீப தரிசன மண்டபம்) ஆகியவை அமைந்துள்ளன .

 

அண்ணாமலையார் :

 

கருவறையில் அண்ணாமலையார் எழுந்தருளியுள்ளார்.

ருத்திர பாகம் சொர்ண பந்தனத்துடன் காணப்படும் இது சுயம்புலிங்கம் .

 

சுவாமி சன்னதிக்கு வடபுறம் உண்ணாமலை அம்மன் சன்னிதி

அமைந்துள்ளது ..

 

மு.மதிவாணன்

வெற்றி இல்லம்

குபேந்திரன் நகர்

அரூர் 636903