tamilnadu epaper

திருவாரூர் மாவட்ட ஆணழகனாக சஞ்சய் தேர்வு

திருவாரூர் மாவட்ட ஆணழகனாக சஞ்சய் தேர்வு


மன்னார்குடி, ஜூன் 3

திருவாரூர் மாவட்ட அளவிலான அமெச்சூர் ஆணழகன் போட்டி- 2025 மன்னார்குடியில் நடந்தது. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 83 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில், வலங்கைமான் மாஸ்டர் ஜிம் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. 2-வது இடம் சேந்தமங்கலம் பல்ஸ் பிட்னஸ் ஜிம் வென்றது. இப்போட்டியில் சிறந்த ஆணழகனாக முதல் இடத்தை திருவாரூர் சஞ்சய், 2-ம் இடத்தை லெட்சுமாங்குடி சபரிநாதன், 3-ம் இடத்தை சேந்தமங்கலம் அபிலேஷ் ஆகியோர் பெற்றனர். 

அமெச்சூர் ஆணழகன் சங்க மாவட்டத் தலைவர் ஏபி.அசோகன் தலைமை வகித்தார். வெற்றியாளர்களுக்கு பளு தூக்கும் சங்க மாவட்டச் செயலாளர் அன்வர்தீன், மாவட்ட குத்துச்சண்டை கழக தலைவர் எஸ்.காமராஜ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ராஜா உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.