tamilnadu epaper

தூத்துக்குடியில் 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

தூத்துக்குடியில் 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்


அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார் 


தூத்துக்குடி, ஜூன் 4

திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி 102-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் கட்சி அலுவலகம் முன் உள்ள கருணாநிதி சிலைக்கு அமைச்சர் பெ.கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

தங்க மோதிரம் 

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அமைச்சர் அணிவித்தார். பின்னர் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 102 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.

இதில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


 மாவட்ட மைய நூலகத்தில் 102 அரசு பள்ளி மாணவ, மாணவிகளை உறுப்பினர்களாக சேர்த்து, அவர்களுக்கு அடையாள அட்டைகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார். முதல்நிலை நூலகர் மா.ராம்சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், திரேஸ்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகளை மேயர் வழங்கினார்.