வந்தவாசி, ஏப் 07:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மாயி திருக்கோயிலில் நேற்று ஸ்ரீராம நவமி வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் மூல மூர்த்திகள் ஸ்ரீராமர், சீதா தேவி அலங்காரத்தில் கையில் வில் அம்பு ஏந்தியபடி, அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மேலும் உற்சவ மூர்த்திகளுக்கும் விஷேச பூஜைகள் நடைபெற்று மகா தீபாராதனை நடந்தேறியது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.