tamilnadu epaper

நந்தா ஸ்ரீ நாட்டியாலயா சார்பில் சாத்துமதுரையில் சலங்கை பூஜை!

நந்தா ஸ்ரீ நாட்டியாலயா சார்பில்  சாத்துமதுரையில் சலங்கை பூஜை!


வேலூர், மே 5-

வேலூர் கணியம்பாடி நந்தா ஸ்ரீ நாட்டியாலயா சார்பில் பரதநாட்டிய சலங்கை பூஜை விழா சாத்துமதுரையில் உள்ள வள்ளி தேவானை சமேத பாலசுப்ரமணியர் கோவிலில் நடந்தது. 

நந்தா ஸ்ரீ நாட்டியாலயா நிறுவனர் நாட்டிய கலையொலி குருவக்லாதேவி தலைமை தாங்கினார். 

இதில் மழலைகள் சஞ்சனா ஸ்ரீ, ஜோஷீகா ஸ்ரீ, மகாலட்சுமி, யோகஸ்ரீ, கனிஷ்கா, விகாஸ்னி, மிரிதினி ஆகியோர் சலங்கை பூஜையில் கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்தவர்களை சுசீலா அம்மாள் ஜெயச்சந்திரன் குடும்பத்தினர் வரவேற்றனர். 

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பரத நாட்டியங்களை கண்டு ரசித்தனர்.