விண்ட்ஹோக்,
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அதிபர் நெடும்போ நந்தி நதைத்வா தலைமையிலான ஸ்வாபோ கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது அமைச்சரவையில் வேளாண்துறை மந்திரியாக இருந்தவர் மெக் ஆல்பர்ட் ஹெங்காரி (வயது 59). இவர் கடந்த 2020-ம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை விண்ட்ஹோக்கில் உள்ள குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே சாட்சியத்தை மறைக்க பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அவர் லஞ்சம் கொடுக்க முயன்றார்.
இந்த குற்றச்சாட்டில் போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இந்த நிலையில் ஆல்பர்ட் ஹெங்காரியை பதவி நீக்கம் செய்து அதிபர் நெடும்போ அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.