tamilnadu epaper

பகவதி அம்மன்* கன்னியாகுமரி

பகவதி அம்மன்* கன்னியாகுமரி

தேவர்களையும், முனிவர்களையும் அந்த அசுரர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக, சக்திதேவி கன்னிப் பெண்ணாக, தென்பகுதியான குமரியில் அவதரித்தாள். இந்த பூமியில் கன்னிப் பெண்ணாக பிறந்த சக்திதேவி அந்த ஈசனிடம் பக்தி கொண்டு, ஈசனை மணம் முடிப்பதற்கு கடும் தவத்தை மேற்கொண்டாள்.

 

சிவபெருமானும் சுசீந்திரம் என்னும் இடத்தில் தாணுமாலயன் என்ற பெயர் கொண்டு வாழ்ந்து வந்தார். தேவியின் தவத்திற்கு மனமிரங்கி மணப்பதற்கு விடிவதற்குள் வருவதாக வாக்களித்தார். ஆனால் நாரதர் ஈசன் தேவியை மறந்து விட்டால் அப்புறம் பாணாசுரனை அழிக்க முடியாது என்பதால் விடியற்காலை ஆகும் முன்பே சேவலாக கூவிவிட்டார். எனவே ஈசனும் விடிந்து விட்டது இனிமேல் தேவியை மணக்க இயலாது என்று சுசீந்திரத்திற்கு திரும்பி சென்று விட்டார். தேவி இதனால் கோபம் கொண்டாள். பாணாசுரனும் தேவியை மணம் புரிய விரும்பினான். வானளாவிய உருவத்தைக் கொண்ட தேவி பாணாசுரனை தன் கால்களால் மிதித்து வதம் செய்தாள். தேவர்கள் அனைவரும் தேவியை பூக்கள் தூவி சாந்தம் அடையச் செய்தனர். தங்களைக் காப்பாற்றிய தேவிக்கு நன்றியையும் பணிவோடு தெரிவித்துக் கொண்டனர்.

 

கோபம் தணிந்த தேவி சாந்தி அடைந்து அன்று முதல் இன்று வரை கன்னியாகுமாரியில் கன்னிப் பெண்ணாக, பகவதி அம்மனாக அமர்ந்து, மக்களின் குறைகளை நீக்கி கொண்டிருக்கின்றாள் என்கிறது வரலாறு.

 

தேவியின் திருத்தலங்கள் தொடரும்...

 

கீதா ராஜா சென்னை