எங்கள் வீட்டுத் தோட்டத்தில்
எங்கும் பறக்குது பறவைகள்
இரையைத் தேடி சில பறவை
இணையத் தேடி சில பறவை
பூவைத் தேடி சில பறவை
கனியைத் தேடி சில பறவை.
கொய்யா மரத்தில் கிளியும்
வேப்ப மரத்தில் காகமும்
புளிய மரத்தில் புறாவும்
எல்லா பூவிலும் தேன்சிட்டும்
இரையையும் தேடுது
அமர்ந்து ஓய்வும் எடுக்குது.
உண்டு செறித்த விதைகளையே
காடும் மேடும் விதைக்குது
புதிய செடிகள் முளைக்குது
கூடுதல் பலன் கிடைக்குது
பறவையிடம் பாசம் காட்டிடுவோம்
பூமியைப் பசுமை ஆக்கிடுவோம்
*- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.*