புதுடெல்லி, மார்ச் 20–
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ. ஆட்சி அமைந்த பிறகு, கடந்த 2015 முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை 195 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்தது. இதில் இரண்டு பேருக்கு மட்டுமே தண்டனை அளிக்கப்பட்டதாக மாநிலங்களவையில் நேற்று நிதித்துறை இணை அமைச்சர் தெரிவித்தார். மேலும் ஆண்டு வாரியாக அரசியல்வாதிகள் மீது தொடரப்பட்ட பட்டியலையும் அவர் வாசித்தார். 2022–23 ம் ஆண்டில் அதிக பட்சமாக 32 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. மக்களவைத் தேர்தல் நெருங்கிய நிலையில் 2022 முதல் 2024 வரை 59 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.