பாடி வரவேணும் பாப்பா! பாசம் மிகுந்தவளே பாப்பா! தேடி வந்த தெய்வமே பாப்பா! தேசத்தின் எதிர்காலம் பாப்பா!
வீதியிலே விளையாடும் பாப்பா! வேடிக்கை உலகம் இது பாப்பா! கீழே விழுந்தாலும் பாப்பா! கிளர்ந்தெழ மறவாதேப் பாப்பா!
உண்மை உனக்குத்துணைப் பாப்பா.. உன்படிப்பு அறிவின் ஔி பாப்பா! பெண்மை உயர்ந்ததடிப் பாப்பா! நீ பேசுகின்ற தெய்வமடிப் பாப்பா.!
பாலியல் சீண்டல்களைக் கண்டால்.. நீ பயம் கொள்ளலாகாது பாப்பா! தோலை உரித்துவிடப் பாப்பா.. நீ துப்பாக்கி ஏந்திடடிப் பாப்பா.!
காலையெழுந்தவுடன் சிலம்பம்! பின்பு கனிவு கொடுக்கும் கலை பரதம்! மாலைமுழுதும் ஈட்டி எறிவாய்.. நீ மாவீரம் கொண்டவள்தான் பாப்பா!
வீதியில் தலை நிமிர்ந்து நடப்பாய்! வீணர்களின் பார்வைகளை தூசாக மதிப்பாய்! ஆணுக்கு நிகராக இருப்பாய்.! நீ ஆதிசக்தி வடிவமடிப் பாப்பா!
-வே.கல்யாண்குமார்