tamilnadu epaper

பார்சிலோனா மருத்துவர் உயிரிழந்ததால் லா லிகா போட்டி ஒத்திவைப்பு

பார்சிலோனா மருத்துவர் உயிரிழந்ததால் லா லிகா போட்டி ஒத்திவைப்பு

கால்பந்து உலகின் முக்கிய கிளப் தொடர் களில் ஒன்றான லா லிகா ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரு கிறது. இந்த லா லிகா தொடரில் சனிக்கிழமை அன்று (இந்திய நேரப்படி ஞாயிறன்று அதிகாலை) நடைபெறவிருந்த பார்சிலோனா - ஒசாசுனா அணிகளுக்கு எதிரான லீக் ஆட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. பார்சிலோனா அணியின் மருத்துவர் கார்லஸ் மினாரோ கார்சியா (53) மரணமடைந்ததன் (மாரடைப்பு எனக் கூறப்படுகிறது) காரணமாகவே இந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டதாகவும், விரைவில் இந்த ஆட்டம் நடத்தப்படும் என லா லிகா தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. போட்டி தொடங்க 20 நிமிடமே இருந்த சூழலில், போட்டி ரத்து செய்யப்பட்டதால் மைதானத்தில் குவிந்து இருந்த ரசிகர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் ஸ்பெயின் நாட்டின் காட்டலோனியா மைதானத்தில் சிறுது நேரம் பதற்றம் ஏற்பட்டது. பாராட்டுக்குரியது போட்டி தொடங்கும் முன்பு மற்றும் மைதானத்தில் வீரர்கள் உயிரிழந்தால் மட்டுமே ஆட்டம் ஒத்திவைப்பு அல்லது ரத்து செய்யப்படும். மற்றபடி அணிக்குழுவில் யாரும் உயிரிழந்தால் போட்டி ஒத்திவைக்கப்பட்ட மாட்டாது. சொல்லப்போனால் கிளப் அணியின் உரிமையாளர் மரணமடைந்தால் கூட போட்டி ஒத்திவைக்கப்படாது. ஆனால் ஒரு அணியின் மருத்துவர் ஒருவர் உயிரிழந்த காரணத்திற்காக கால்பந்து போட்டி ஒத்திவைக்கப்பட்டு இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் கார்லஸ் மினாரோ கார்சியா 2017ஆம் ஆண்டு முதல் பார்சிலோனா அணியின் மருத்துவராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.