tamilnadu epaper

பெரியஇலந்தைக்குளம் கிராமத்தில் திமுக சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் - எம்.எல்.ஏ வெங்கடேசன் பங்கேற்பு

பெரியஇலந்தைக்குளம் கிராமத்தில் திமுக சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் - எம்.எல்.ஏ வெங்கடேசன் பங்கேற்பு


அலங்காநல்லூர்,மே.13-


மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பெரியஇலந்தைக்குளம்ம் கிராமத்தில் மேற்கு ஒன்றியம் தி.மு.க சார்பில் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் பரந்தாமன் தலைமை தாங்கினார்.மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன்,மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன்,பேரூர் செயலாளர்கள் ரகுபதி,மனோகரவேல்பாண்டியன், அலங்காநல்லூர் பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்தக் கூட்டத்தில் எம்.எல்.ஏ வெங்கடேசன்,தலைமைக் கழகப் பேச்சாளர் தர்மபுரி அதியமன், செசிலின் சந்தியா தீப்தி ஆகியோர் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனைகள் குறித்து சிறப்புரையாற்றி பேசினார்கள். இதில் ஒன்றிய நிர்வாகிகள் நடராஜன்,விஜயன்,அருண்குமார் ஜெயபிரகாஷ்,அணி அமைப்பாளர்கள் மருது பாண்டியன்,சந்தனகருப்பு,  

தவசதீஷ்,ரியாஸ்கான்,ராகுல் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டம் இறுதியில் கிளைச் செயலாளர் அற்புதம் நன்றி கூறினார்.