tamilnadu epaper

மகா கும்பமேளா புனித நீர் ஜெர்மனிக்கு அனுப்பி வைப்பு

மகா கும்பமேளா புனித நீர் ஜெர்மனிக்கு அனுப்பி வைப்பு

மகா கும்பமேளா நடைபெற்ற திரிவேணி சங்கமத்தின் புனித நீருக்கான தேவை வெளிநாட்டில் அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டும் வகையில் 1,000 பாட்டில்கள் ஜெர்மனியில் உள்ள பக்தர்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச அரசு நேற்று தெரிவித்துள்ளது.


இதுகுறித்து உபி. அரசு மேலும் கூறியுள்ளதாவது: ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை பிரம்மாண்டமாக பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்ப மேளாவில் 66 கோடி பக்தர்கள் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.


இந்த தெய்வீக நிகழ்வின் ஆன்மிக சாரத்தை, திருவிழா மைதானத்திற்கு அப்பாலும் நீட்டிக்கும் வகையில், தீயணைப்பு துறை மூலம் உ.பி.யின் 75 மாவட்டங்களுக்கும் திரிவேணியின் புனித நீர் விநியோகிக்கப்பட்டது.


இப்போது, இந்த புனித நீர் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுகிறது. முதல் முறையாக, ஜெர்மனியில் உள்ள பக்தர்களுக்கு 1,000 பாட்டில்களில் மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தின் புனித நீர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


மகா கும்பமேளா முடிந்த பிறகு, மாநிலம் முழுவதும் உள்ள பக்தர்களுக்கு புனித நீரை மகா பிரசாதமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு உத்தர பிரதேச அரசு கூறியுள்ளது.