tamilnadu epaper

மரவள்ளிக் கிழங்குப் புட்டு

மரவள்ளிக் கிழங்குப் புட்டு

தேவையான பொருட்கள் : 

மரவள்ளிக் கிழங்கு : 1/2 Kg

தேங்காய் துருவல் :1/2மூடி

நாட்டுச் சர்க்கரை : தேவைக்கேற்ப

ஏலக்காய் பொடி: சிறிதளவு

அரிசிமாவு: 100G

உப்பு: சிறிதளவு

செய்முறை:

மரவள்ளிக்கிழங்கை தோள்நீக்கி சுத்தம் செய்து துருவி எடுத்துக்கொள்ள வேண்டும், துருவிய மரவள்ளிக் கிழங்கை தண்ணீரில் போட்டுப் பிழிந்து எடுத்து அதோடு அரிசிமாவு,ஏலக்காய் தூள், உப்பு சேர்த்துப் பிசைந்து ஆவியில் பத்துநிமிடங்கள் வேகவைத்து எடுத்து அதில் தேங்காய் பூ தூவி நாட்டுச் சர்க்கரை சேர்த்தால் சுவையான மரவள்ளிக்கிழங்குப் புட்டு தயார்.

குறிப்பு: அரிசி மாவு சேர்த்துப் பிசைந்த மரவள்ளிக் கிழங்குடன் நாட்டுச் சர்க்கரை, தேங்காய் துருவல் சேர்த்து வாழை இலையில் வைத்து கொழுக்கட்டையாகவும் செய்யலாம்

பயன்கள்: 

வயிற்றுப்புண் சரியாகும்,கால்சியம் நிறைந்துள்ளது.

க.ஜெயா சுரேஷ்,

வேம்பார்.