தினமும் அரை மணி நேரமாவது மவுனமாக தியானம் செய்யுங்கள்.
* மவுனத்தை அனுஷ்டித்தால் அந்த நேரத்திலாவது சண்டை, சச்சரவு இராது. இதுவும் ஒரு வகையான சமூக சேவைதான்.
* நல்லதை உண்டாக்கிக் கொடுக்கிற சக்தி மவுனத்துக்கு உண்டு. நன்மைகளை பெற்றுத்தர மவுனமே உபாயமாக இருக்கிறது என்பதை "மவுனம் ஸர்வார்த்த ஸாதகம்' என்று சொல்வார்கள்.
* ஒன்றைச் சுருக்கமாக சொன்னால் அது மனதில் பதியாமல் போய்விடலாம். அதையே சுவாரஸ்யமான கதையாக சொன்னால் நன்றாக மனதில் பதியும்.
* வரவு, செலவு என்பது பணம் ஒன்றில் மட்டும் இல்லை. நாம் வார்த்தையை அதிகம் விட்டால் அது செலவு. எதிராளியிடம் வாங்கிக் கட்டிக் கொள்வது வரவு. *- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்.*